பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்
டொனமூர் அரசியலமைப்பின் கீழ் 1931 ஆம் ஆண்டு இலங்கை அரச சபைக்கு முதல் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார்.
1931 ஆம் ஆண்டு அரச சபையில் பெண் பிரதிநிதித்துவம் 2 வீதமாக இருந்ததாகவும்இ 91 வருடங்களின் பின்னரும் 2022 இல் 5 வீதமாக பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சனத்தொகையில் பெரும்பான்மையான பெண்களாக இருந்தாலும் தற்போது 12 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே பாராளுமன்றத்தில் இருப்பது துரதிஷ்டவசமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு புதிய சட்டங்களை உருவாக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டியல் முறையொன்றை அறிமுகப்படுத்த முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.