Friday, September 19, 2025
27.8 C
Colombo
அரசியல்கோட்டாவும் நானும் ஒரே முடிவையே சந்தித்தோம் - மைத்ரிபால சிறிசேன

கோட்டாவும் நானும் ஒரே முடிவையே சந்தித்தோம் – மைத்ரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் போராட்டத்தின் போது தனக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஒரே நிலைதான் ஏற்பட்டது என மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அந்த இரண்டு சம்பவங்களிலும் பாதுகாப்புத் தரப்பினர் தனக்கும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் உரிய தகவல்களை வழங்கவில்லை.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் பத்திரங்களை பரிமாறிக்கொண்டார்களே தவிர, அது தொடர்பில் தமக்கு ஒரு தொலைபேசி அழைப்பையும் வழங்கவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதன் மூலம் ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பு தம்மீது சுமத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 9ஆம் திகதி சுமார் 25,000 பிரஜைகள் போராட்டத்திற்காக கொழும்புக்கு வரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதிக்கு புலனாய்வுப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டதாக மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 400,000 பிரஜைகள் எதிர்பாராதவிதமாக கொழும்புக்கு வந்ததாகவும், அவர்களால் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளால் தடுக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles