நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளனர்.
இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் ஓளடதங்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்த கடனுதவியை பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக, நிதி அமைச்சர் இந்தியா நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.