வரவு – செலவுத் திட்டத்தின் 2404 பில்லியன் ரூபா பற்றாக்குறையை வரி அதிகரிப்பு மற்றும் கடன்களை பெறுவதன் மூலம் சமநிலைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பாதீடு என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நித்திரையின் போது கண்ட ஓர் கனவாகும்.
அது கனவு உலகுக்கு எடுத்து செல்வதாக உள்ளதாகவும், அது நடைமுறைக்கு பொருத்தமில்லை எனவும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் பாதீடு சர்வதேச நாணய நிதியத்தின் குரல் என்றும் அதனை வெளிப்படுத்து என்பது ஜனாதிபதியின் வாய் மாத்திரமே என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
புதன்கிழமை (16) எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.