அரசாங்கம் இதுவரை மறைத்து வைத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையை கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று (09) நாடாளுமன்றத்திற்கு எடுத்து வந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் காண்பித்த போது பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கொதிப்படைந்ததுடன், இது உணர்வுபூர்வமான விடயம் என்பதால் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டாம் என தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஹர்ஷ டி சில்வா, பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் தாம் அதனைச் செய்யமாட்டேன் என்றார்.