Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
சினிமாபுத்தக கண்காட்சியில் பணப்பைகளை திருடிய நடிகை கைது

புத்தக கண்காட்சியில் பணப்பைகளை திருடிய நடிகை கைது

புத்தக கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்களின் பணப்பைகளை திருடிய வங்காள நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அண்மையில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்றது.

இந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்ற நடிகை ரூபா தத்தா என்பவர் அங்கிருந்த பொதுமக்களின் பணப்பைகளை திருடியுள்ளார்.

இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர், அவரை சோதனை செய்தபோது, அவரிடமிருந்து பல பணப்பைகளும் 75,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரிடம் விசாரணை செய்தபோது குப்பை கூடையில் ஒரு பணப்பையை வீசி விட்டு அது உங்களுடையதா? என மக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களது பணப்பைகளை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, நடிகை ரூபா தத்தா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவத்துடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடிகை ரூபா தத்தா ஏற்கனவே பிரபல பொலிவூட் நடிகரான அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலிக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular Bengali actress Rupa arrested for pickpocketing at Kolkata book fair

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles