தனக்கு விருப்பமில்லாத இடம் நாடாளுமன்றம் எனவும், அரசியல்வாதிகளின் தவறான செயல்களின் விளைவுகளை நாடு அனுபவித்து வருவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7 மகாவலி கேந்திர நிலையத்தில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்க மக்கள் தயங்குகின்றனர். அரசியல்வாதிகளே இன்று நாட்டை இவ்வாறான நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். சட்டத்தரணிகளாக பணியாற்றுபவர்களுக்கு எப்படி பேச வேண்டும் என சட்டக் கல்லூரியில் கற்றுக் கொடுக்கப்பட்டாலும், நாடாளுமன்றில் அதனை தலைகீழாக கற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பேச்சுப்பொருளை தவிர்த்து அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படுகின்றது. கைதிகள் செய்த குற்றங்களுக்காக அவர்கள்தான் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் இன்று இந்த நாட்டின் அரசியல்வாதிகளின் செயல்களின் பிரதிபலனை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இன்று சமூகத்தில் தவறு செய்பவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்” என அவர் தெரிவித்தார்.