எதிர்க்கட்சித் தலைவரின் தற்போதைய செயற்பாடுகள் காலத்துக்கு ஏற்றதல்ல எனவும், இரண்டு ஜனாதிபதிகள் கேட்ட போதும் பொறுப்பேற்காமல் இன்று வீதிக்கு வந்து மக்களைத் திரட்ட முயல்வது வேடிக்கையானது எனவும் மிஹிந்தல தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று மக்கள் போராட்டம் நடத்தினால் அதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற வேடிக்கையான போராட்டங்கள் சுற்றுலாத் துறையை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யும் என்றும் இது சாமானிய மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
நேற்றைய போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.