மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு உள்ளிட்ட பல நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகள் தொடர்பில் கருத்துரைத்த அவர், ஏனைய எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் மற்றும் ரஷ்ய- யுக்ரைன் போர் போன்ற காரணங்களால் நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.