Saturday, September 21, 2024
29 C
Colombo
அரசியல்பனிப்பாறையில் மோதிய பின்னரே டைட்டானிக் கப்பலை நான் ஏற்றுக் கொண்டேன் - ஜனாதிபதி

பனிப்பாறையில் மோதிய பின்னரே டைட்டானிக் கப்பலை நான் ஏற்றுக் கொண்டேன் – ஜனாதிபதி

பனிப்பாறையில் மோதிய பின்னரே டைட்டானிக் கப்பலை தாம் கைப்பற்றியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை வோல்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று (31) நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் டைட்டானிக் கப்பலை மோதி விபத்துக்குள்ளான பனிப்பாறையில் இருந்து அகற்றுவதற்கு தன்னால் இயன்றளவு முயற்சி எடுப்பதாக தெரிவித்தார்.

அத்துடன், டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல முடிந்தால் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும் எனவும், முதலில் செய்ய வேண்டியது அந்நிய செலாவணியை பாதுகாப்பதே எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் எரிபொருள், உரம் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்த ஜனாதிபதி, முதலில் இந்த செயற்பாடுகள் சிறப்பாக இல்லாவிட்டாலும் தற்போது நிலைமை நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

விவசாயம் உட்பட அனைத்திற்கும் வரி விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles