Tuesday, July 15, 2025
29.5 C
Colombo
அரசியல்ராஜபக்ஷர்களுக்கு பதவி பேராசை போகவில்லை - சரத் பொன்சேகா

ராஜபக்ஷர்களுக்கு பதவி பேராசை போகவில்லை – சரத் பொன்சேகா

நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்ஷர்களின் ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டால் தற்போதுள்ளதை விட கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா MP தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகே உள்ளிட்டோரை பார்வையிடுவதற்காக சென்றிருந்த சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

ராஜபக்சக்களுக்கு இன்றும் அதிகார பேராசை காணப்படுவதோடு இதுவரை கொள்ளையடித்து, திருப்தியடைய முடியாமலேயே அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவோம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.

எனினும் அவர்கள் முன்னெடுக்கும் இந்த முயற்சி ஒழுக்கமானதல்ல.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் வரவேற்பிருக்காது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles