தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் ஐஸ்வர்யா மீண்டும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து ‘3’ என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
அத்துடன், சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.
தற்போது, ஐஸ்வர்யா தனது முசாபிர் மியூஸிக் ஆல்பம் வீடியோ வேளைகளை ஆரம்பித்து அது குறித்த அறிவிப்புகளை தொடர்ச்சியாக அறிவித்து வந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சினிமா துறையில் தனுஷுக்கு நேர்எதிர் போட்டியாளராக கருதப்படும் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்கப்போவதாக வரும் தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.