தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
கடைசியாக தமிழில் தனது 50ஆவது படமான ‘மஹா’ படத்தில் நடித்திருந்தார். சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனையடுத்து ஆதி நடிப்பில் உருவாகி வரும் ‘பார்ட்னர்’, ‘மை நேம் இஸ் ஸ்ருதி’, ‘ரவுடி பேபி’, உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார்.
மேலும் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹன்சிகாவின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் திருமணத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தனது வருங்கால கணவர் குறித்த அறிவிப்பையும், திருமணம் குறித்த திகதியையும் விரைவில் ஹன்சிகா வெளியிடுவார் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.