சினிமாஷாருக்கானின் நெகிழ்ச்சி பதிவு

ஷாருக்கானின் நெகிழ்ச்சி பதிவு

சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், ‘கடந்த 30 நாட்கள் என்ன ஒரு சிறப்பான அனுபவம். தலைவர் ரஜினிகாந்த் எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசிர்வாதம் செய்தார். நயன்தாராவுடன் இணைந்து படம் பார்த்தேன். அனிருத்துடன் பார்ட்டி கொண்டாடினேன். விஜய் சேதுபதியுடன் நீண்ட உரையாடல். தளபதி விஜய் சுவையான உணவு அளித்தார். இயக்குநர் அட்லி மற்றும் பிரியா ஆகியோரின் விருந்தோம்பலுக்கு நன்றி. தற்போது சிக்கன் 65 ரெசிபி சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles