மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான நிவின் பாலி நடிக்கும் ‘படவெட்டு’ எனும் படத்தில் ‘அசுரன்’ நாயகி மஞ்சுவாரியார் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை லிஜு கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.
குறித்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென கண்ணூர் மாவட்ட காவல்துறையினர் இயக்குநர் லிஜு கிருஷ்ணாவை கைது செய்துள்ளனர்.
அவருடன் பணியாற்றிய பெண் ஒருவர் காவல்துறையினருக்கு அளித்த முறைப்பாடு காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக அவர் தன்னை ஏமாற்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் அளித்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இயக்குநர் லிஜு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் லிஜு கிருஷ்ணாவின் கைது காரணமாக ‘படவெட்டு’படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள், இந்த வழக்கு முடியும் வரை லிஜு கிருஷ்ணாவுக்கு தடை விதிக்க வேண்டும் என இயக்குநர் சங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.