இரவுநேர பொருளாதாரம் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று ஹபரணையில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரவு பொருளாதாரம் என்பது நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் பணம் பெறுவதற்கான ஒரு முறையாகும்.
மக்கள் பகலில் சம்பாதிக்கும் பணத்தை செலவழிக்க இரவில் நாட்டில் இடமில்லை என்றால், அரசாங்கமும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணிக்குப் பிறகு தங்கள் அறைகளில் உறங்குவதற்காக வருவதில்லை என்றும், கஞ்சா செய்கையில் ஈடுபட்டு டொலர் சம்பாதிக்கும் வரை தம் முயற்சிகளைக் கைவிட மாட்டேன் எனவும் அவர் கூறினார்.