தாம் பதவி விலகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அறிவித்துள்ளார்.
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்றொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் பதவி வகிந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முதல் அமுலாகும் வகையில் குறித்த பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும், தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி தேசிய அமைப்பாளராகவும் ஜயந்த சமரவீர செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.