கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட SLFPயின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமையஇ மாவட்ட தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் மற்றும் மத்திய செயற்குழுவின் உறுப்பினர் பதவிகளிலிருந்தும் சம்பந்தப்பட்டவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.
இந்த தீர்மானத்தை கடிதம் ஊடாக உரியவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 14 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
அவர்களில் மஹிந்த அமரவீர, நிமல் ஸ்ரீபால டி சில்வா, லசந்த அழகியவண்ண, சாந்த பண்டார, சுரேன் ராகவன், சாமர சம்பத் தசநாயக்க, ஜகத் புஷ்பகுமார மற்றும் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய ஆகியோர் அரசாங்கத்துடன் தொடர்புபட்டுள்ளதுடன், அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.