Thursday, September 19, 2024
28 C
Colombo
சினிமாமீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்கும் சன்னி லியோன்

மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்கும் சன்னி லியோன்

பொலிவூட் நடிகையான சன்னி லியோன் அவ்வபோது தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அவர் தற்போது தமிழில் ‘வீரமாதேவி’, ‘ஓ மை கோஸ்ட்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கவுள்ளதுடன், சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்தப் படத்தில் விஷ்ணு மஞ்சு, நாகேஸ்வர ராவ் என்ற கதாபாத்திரத்திலும், சன்னி லியோன், ரேணுகா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தலைப்பு உட்பட ஏனைய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தெரிவித்துள்ளார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles