ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (07) முற்பகல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே உள்ளிட்ட தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், குறித்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.