நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு புறம்பாக கோப் மற்றும் கோபா குழுவின் தலைவர் பதவிகளுக்கு MPகளை நியமிக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குழுக்களை ஸ்தாபிப்பதற்கு முன்னர் SJB இரண்டு பேரின் பெயர்களை அவைத்தலைவர் பதவிகளுக்கு முன்மொழிந்திருந்ததாகவும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்ய முடியாது எனவும் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலில் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் பின்னர் பெரும்பான்மை உறுப்பினர்களால் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.