புதிய அமைச்சரவை அடுத்த வாரம் நியமிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியுள்ள போதிலும், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் இதுவரையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
எனவே, சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, நாமல்ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, சனத் நிஷாந்த, கஞ்சன விஜேசேகர ஆகியோர் புதிய அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய அமைச்சரவை 30 பேரைக் கொண்டதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.