Sunday, April 20, 2025
29 C
Colombo
சினிமா'கே.ஜி.எஃப் செப்டர் 2' படம் - ட்ரெய்லர் வெளியாகும் திகதிகள் அறிவிப்பு

‘கே.ஜி.எஃப் செப்டர் 2’ படம் – ட்ரெய்லர் வெளியாகும் திகதிகள் அறிவிப்பு

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப். செப்டர் 1’ (K.G.F: Chapter 1) படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் அடுத்த பாகம் ‘கே.ஜி.எஃப் செப்டர் 2’ (K.G.F:Chapter 2) என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா தண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக் கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் ‘கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கே.ஜி.எஃப் செப்டர் 2’ படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ‘கே.ஜி.எஃப் செப்டர் 2’ படத்தின் ட்ரைலர் வரும் 27 ஆம் திகதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles