Thursday, December 4, 2025
31.7 C
Colombo
அரசியல்ரணில் ஒரு யுக புருஷர் - அமைச்சர் நிமல்

ரணில் ஒரு யுக புருஷர் – அமைச்சர் நிமல்

தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளையும் சிறந்த தலைமைத்துவத்தையும் எவ்வித தயக்கமுமின்றி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று (10) கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவாலை துணிச்சலுடன் எதிர்கொண்ட யுக புருஷர் எனவும், தனது அரசியல் எதிர்காலம் அல்லது வேறு விடயங்கள் குறித்து எதுவும் பேசாமல் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நாடு செல்லும் திசை மிகவும் தெளிவாக இருப்பதாக மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles