‘கொரோனா குமார்’ திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக பிரபல நடிகரான பகத் பாசில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பகத் பாசில், தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார்.
மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’ திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க பகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.