Wednesday, April 15, 2026
27.2 C
Colombo
அரசியல்வாய்ப்பு கிடைத்திருந்தால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்திருப்பேன் - டலஸ் MP

வாய்ப்பு கிடைத்திருந்தால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்திருப்பேன் – டலஸ் MP

ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்றிருந்தால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திருப்பேன் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் நான் வெற்றி பெற்றிருந்தால் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட கடைசி ஜனாதிபதியாக நான் தான் இருந்திருப்பேன்.

ஏனெனில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருப்பேன்.

தற்போதைய நாட்டின் நிலையில் சர்வகட்சி அரசாங்கமொன்றே தேவையாக உள்ளது.

எனினும், சர்வ வாக்கு அரசாங்கமே முன்னெடுக்கப்படுகின்றது.

சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படாமல் பொதுமக்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles