Saturday, November 1, 2025
29 C
Colombo
அரசியல்எதிர்கட்சியில் அமரப்போகும் டலஸ் - பீரிஸ் குழுவினர்?

எதிர்கட்சியில் அமரப்போகும் டலஸ் – பீரிஸ் குழுவினர்?

தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் அமரப்போவதாக முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினர்.

இதன்போது அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த அண்மைய சில தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

30க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய அவசரக்கால சட்ட வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை என அழகப்பெரும தெரிவித்தார்.

நேற்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஆதரவு தனது குழுவிற்கு இருப்பதாக அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், தாம் பதவியில் இருந்து விலகவில்லை என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles