Saturday, November 1, 2025
29 C
Colombo
அரசியல்"போராட்டத்தை முடிவுறுத்த ஆகஸ்ட் 9 கொழும்புக்கு வாருங்கள்"- சரத் பொன்சேகா

“போராட்டத்தை முடிவுறுத்த ஆகஸ்ட் 9 கொழும்புக்கு வாருங்கள்”- சரத் பொன்சேகா

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்தவேண்டாம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இந்த கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போராட்டக்காரர்கள் நாட்டுக்காக போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவினர்கள்.

எனவே அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம். அதேநேரம் ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டாம்.

இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு கிடைத்த பெருமையை பழுதாக்க வேண்டாம்.

இதேவேளை போராட்டவாதிகள் மத்தியில் பல்வேறு கொள்கைகள் இருக்கின்றபோதும், ஒரே கொள்கைக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் ஓருவரை இருவரை அகற்றியதன் மூலம் தூய்மையான அரசியலை ஏற்படுத்தமுடியாது.

எனவே எதிர்வரும் 9 ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுக்கூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

போராட்டவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles