முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாரத்துக்கு மூன்று தடவைகள் அமெரிக்க தூதுவரை சந்தித்து வந்ததாக விமல் வீரவன்ச MP தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இலங்கையில் இன்று மன ரீதியான அழுத்தம் கொடுத்து விடயம் சாதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.
அந்த வகையிலேயே இராணுவத்திடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று கோரப்படுகிறது.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தினார்.