Thursday, April 16, 2026
32.2 C
Colombo
அரசியல்அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க TNA தீர்மானம்

அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க TNA தீர்மானம்

அவசரகால சட்டத்துக்கு எதிராகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கக்கூடாது. அவ்வாறு ஒடுக்க முற்பட்டதால்தான் இந்நாட்டில் ஆயுதப்போராட்டம்கூட ஏற்பட்டது. அந்தவகையில் அவசரகால சட்டத்தை கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போய்விட்டதென சில புல்லுருவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கூட்டமைப்பு ஒருபோதும் சோரம் போகாது. முலுகெலும்புடன் செயற்படுவோம்.” – எனவும் செல்வம் எம்.பி. தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles