Saturday, September 21, 2024
28 C
Colombo
அரசியல்போராட்டக்களத்தில் போதைப்பொருள் அடிமைகளே உள்ளனர் – பிரசன்ன ரணதுங்க MP

போராட்டக்களத்தில் போதைப்பொருள் அடிமைகளே உள்ளனர் – பிரசன்ன ரணதுங்க MP

காலி முகத்திடல் போராட்டக்களம் தற்போது போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பான விவாதம் இடம்பெறுகிறது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கோட்டா கோ ஹோம்’ அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகிச்செல்லுமாறு கோரியே காலி முகத்திடலில் ஆரம்பத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்புவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர் பதவி விலகி அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியும் தெரிவுசெய்யப்பட்டார்.

எனினும், தமது நோக்கம் நிறைவேறிய பின்னரும் போராட்டம் தொடர்கிறது. இது நியாயமற்றது. நாட்டை சீர்குலைத்து, ஆட்சி கவிழ்ப்புக்கு வழிவகுக்கும் இடமாக அது இருக்கக்கூடாது.

அமைதி போராட்டக்காரர்களுக்கு பின்னால் ஒழிந்துகொண்டு இந்த போராட்டத்தை பாதாள உலக குழுவினரும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுமே முன்னெடுக்கின்றனர். இதற்கு சில அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கினர்.

அதனூடாக அவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டனர்.

போராட்டக்காரர்கள் என்று கூறுபவர்கள், ஜனாதிபதி மாளிகையின் வேலிகளை திருடினர். ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்தினர். இவர்களா இந்த நாட்டை கட்டியெழுப்பப் போகிறார்கள்?.

தற்போது, கோட்டாபயவின் பெயரை நீக்கி வேறுசிலரை துரத்துவதற்கு போராட்டம் நடக்கிறது.

துறைமுகம், உயர்தர சுற்றுலா விடுதிகள், துறைமுக நகர் போன்ற பொருளாதார கேந்திரங்கள் அமைந்துள்ள இடத்தை அண்டி போராட்டம் நடத்தப்படுவதால் நாளைய முதலீடுகளை அது பாதிக்கக்கூடும்.

வாக்குகளால் அதிகாரத்துக்கு வரமுடியாது என அறிந்துள்ள சில அரசியல்வாதிகள் கலகத்தினால் ஆட்சிக்குவர முயற்சிக்கின்றனர்.

இத்தகைய போராட்டங்களை பார்க்கும் வெளிநாட்டினர் முதலீட்டுக்கு தகுதியற்ற நாடாக எம்மை கணிக்கக்கூடும். தற்போது, உண்மை போராட்டக்காரர்கள் விலகியுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகர்களும், பாதாள உலகக்குழுவினருமே தற்போது போராட்டத்தை வழிநடத்துகின்றனர் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles