கொழும்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு ஆயுதப் படைகள் அனுப்பப்பட்டதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதனை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
‘அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான கோழைத்தனமான தாக்குதல்.அப்பாவி உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் முரட்டுத்தனத்தின் பயனற்ற காட்சி இது.இந்த நடவடிக்கையானது முக்கியமான கட்டத்தில் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்கு ஆபத்தை விளைவிக்கும்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.