இன்று (20) தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான போட்டியின்போது டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
அதன் தலைவர் மனோ கணேசன் இந்த அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டார்.
அதேபோல அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தீர்மானித்துள்ளன.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்ற டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்றமை விமல் வீரவன்ச உதய கம்மன்பில உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.