இலங்கையின் முன்னைய அரசாங்கம் நிதி நெருக்கடி பற்றிய உண்மைகளை மூடிமறைத்ததாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் உண்மையைச் சொல்லவில்லை.
இலங்கைக்கு ஐந்து வருடங்கள் அல்லது 10 வருடங்கள் தேவையில்லை. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஸ்திரத்தன்மையை அடையும் நகர்வு ஆரம்பமாகும்.
நிச்சயமாக 2024-க்குள் செயல்படும் பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பிக்கும்.
இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ பின்னர் சிங்கப்பூர் சென்றதில் இருந்து தம்முடன் உரையாடினார்.
எனினும் அவர், இன்னும் சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறு எங்காவது இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது என்று விக்ரமசிங்க கூறினார்.