Monday, September 22, 2025
28 C
Colombo
அரசியல்ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூவர் போட்டி

ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூவர் போட்டி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் டலஸ் அழப்பெருமவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாசவே இன்று முன்மொழிந்தார்.

இதனை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழிமொழிந்தார்.

இதனையடுத்து பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தெரிவுக்காக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன முன்மொழிந்தார்.

இதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி தெரிவுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்மொழிந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய அதனை வழிமொழிந்தார்.

இதனையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் மற்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க ஆகியோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இந்தநிலையில் புதிய ஜனாதிபதி தெரிவுக்காக நாளை முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles