Friday, January 17, 2025
24.3 C
Colombo
அரசியல்சஜித்தை ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு SJB ஆலோசனை

சஜித்தை ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு SJB ஆலோசனை

ஜனாதிபதி பதவி போட்டிக்கான வேட்பு மனு இன்று (19) கோரப்படவுள்ளது.

இந்நிலையில் அந்த போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அதன் தலைவர் சஜித்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

போட்டியில் இருந்து ஒதுங்கி, டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெற வைப்பதன்மூலம், சஜித் பிரதமர் ஆகலாம் என்று அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சஜித் மற்றும் டளஸ் ஆகியோர் பிரிந்து செயற்பட்டால், ரணில் விக்ரமசிங்க இலகுவாக ஜனாதிபதியாகிவிடுவார் என்ற அச்சத்தினால் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

ஆனால் இதற்கு சஜித் இன்னும் இணங்கவில்லை என்ற போதும், இறுதிகட்டமாக டளஸ் அழகப்பெருமவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles