இலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையை அடுத்து அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு, ராஜதந்திர ரீதியில் இடைமாறல் வீசாவுக்கு ஏற்பாடு செய்துக்கொடுக்கப்பட்டதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் இருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்று பின்னர் சிங்கப்பூரை சென்றடைந்தார்.
இந்தநிலையில் அவர் மாலைத்தீவில் தரையிறங்கியமை தொடர்பில், அந்த நாட்டின் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியிருந்தது.
இதனையடுத்து மாலைதீவு அரசாங்கம் தமது விளக்கத்தை வழங்கியிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இலங்கையின் இராணுவ வானூர்தியில் கோட்டாபய ராஜபக்சவும், அவரது பாரியாரும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் மாலைதீவுக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக மாலைதீவின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.