கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கு புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வகையில், வேட்பாளர் மனு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) கோரப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் களமிறங்குவார்களாக இருந்தால், புதன்கிழமை 20ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறும்.
இரகசிய வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார்.