மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
மாலைதீவு சபாநாயகர் ட்விட்டர் பதிவில், இலங்கை இனி முன்னேற முடியும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் இருந்திருந்தால், தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணமாக ஒருபோதும் அவர் பதவி விலகியிருக்க மாட்டார் என அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மாலைதீவு அரசு சூழ்நிலைக்கு ஏற்றவாறு தலையீடு செய்தது என்பது அவரது கருத்து என காட்டுகிறது. இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவை இட்டுள்ளார்.