இந்தியாவுக்கு -அவுஸ்திரேலியா எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 83 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இன்று (22) பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.
இந்தப் போட்டியில் 49.4 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது.
தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மோசமான தொடக்கத்தை அளித்தது.
27 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 67 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
இன்றைய ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி 83 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி 19 ஓட்டங்களையும், மிட்செல் ஸ்டார்க் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.