Sunday, October 12, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ள பிள்ளையான்

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ள பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று (20) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் ஃபோருக்கு அவரது முன்னாள் செயலாளர் அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தை பதிவு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பி இம்மாதம் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles