Saturday, July 26, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

குடிவரவு திணைக்களத்தின் நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த 8 வெளிநாட்டவர்களை நேற்று (18) பிற்பகல்,கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க, ஆடியம்பலம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வீசா இன்றி சிலர் தங்கியிருப்பதாக 119 அவசர சேவை தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 – 30 வயதிற்குட்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles