Thursday, May 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உலகம்வசூலில் சானைப்படைத்து வரும் அமரன் திரைப்படம்

வசூலில் சானைப்படைத்து வரும் அமரன் திரைப்படம்

சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த படமும் செய்திராத வசூல் சாதனையை படைத்துள்ளது அமரன். ரூ. 100 கோடியை மூன்று நாட்களில் கடந்தது, ரூ. 200 கோடியை பத்து நாட்களில் கடந்தது என தொடர் சாதனைகளை இப்படம் படைத்து வருகிறது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படம், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்து இருந்தார்.

இந்த நிலையில் 16 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள அமரன் திரைப்படம், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 280 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 16 நாட்களில் ரூ. 135 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைக்கும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles