Monday, March 31, 2025
30 C
Colombo
ஏனையவைபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை பதவி பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை பதவி பிரமாணம்

தேசிய மக்கள் சக்தி அமைச்சரவை நாளை (18) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மலிமா அரசாங்கத்தின் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாகவும், 23 அல்லது 25 அமைச்சரவை அமைச்சர்களும் 25 அல்லது 27 பிரதி அமைச்சர்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு குறித்த விடயம் தொடர்பான குறிப்பிட்ட அமைச்சுக்கு ஒன்று அல்லது இரண்டு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும், புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விஜித ஹேரத்துக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவி கிடைக்கப் போகிறது.

பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களை ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் எமக்கு தெரிவித்தன.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles