Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை பரீட்சை தொடர்பான வகுப்புக்களுக்கு தடை

உயர்தரப் பரீட்சை பரீட்சை தொடர்பான வகுப்புக்களுக்கு தடை

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புக்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள், விரிவுரைகள் மற்றும் பயிற்சி வகுப்புக்கள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பரீட்சை காலத்தின் போது பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தேசியப்பட்டியல் வேட்பாளராக சத்தியலிங்கம் நியமனம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் வேட்பாளராக இலங்கை தமிழரசு கட்சியின் பீ.சத்யலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

Keep exploring...

Related Articles