Sunday, February 16, 2025
24 C
Colombo
செய்திகள்உலகம்சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்த குழு நாட்டிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.

உரிய மீளாய்வின் பின்னர், சர்வதேச நாணய நிதியம் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் இக் குழு கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles