Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்முடிவுக்கு வரும் தனுஷ் நயன்தாரா விவகாரம்

முடிவுக்கு வரும் தனுஷ் நயன்தாரா விவகாரம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்களது திருமண வீடியோ விரைவில் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அவர்களின் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டாக்குமெண்டரியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டீசர் எல்லாம் வெளியானது. ஆனால், விக்னேஷ் சிவனின் குழந்தைகளான உலக் மற்றும் உயிருக்கே 2வது பிறந்தநாள் கொண்டாடி விட்டனர்.

இன்னமும் அந்த திருமண டாக்குமெண்டரி படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவில்லை. அதற்கு காரணமே தனுஷ் தான் என்கிற திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸாக விரைவில் ஓடிடியில் நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகப் போவதாகவும் கூறுகின்றனர்.

நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸில் வெளியிடாமல் இருக்க காரணமே தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் சில காட்சிகளை அதில் பயன்படுத்தியிருப்பது தான் என்றும் அதற்கான என்ஓசியை தனுஷ் தராமல் இழுத்தடித்தது தான் காரணம் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வௌிநாட்டு பெண்

காலி, அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். 41 வயதுடைய ரஷ்ய பெண்ணொருவரே...

Keep exploring...

Related Articles