Wednesday, April 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வௌிநாட்டு பெண்

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வௌிநாட்டு பெண்

காலி, அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

41 வயதுடைய ரஷ்ய பெண்ணொருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த பெண் ரஷ்ய பெண் கடந்த 8 ஆம் திகதி அன்று இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், இந்த ரஷ்ய பெண் கடந்த 12 ஆம் திகதி அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அதிகளவில் மது அருந்திவிட்டு தனது ஹோட்டல் அறைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது ரஷ்ய பெண்ணின் ஹோட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்த இனங்காணாத நபரொருவர் இந்த ரஷ்ய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ரஷ்ய பெண் இது தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles