Sunday, April 20, 2025
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுமீண்டும் முதலிடம் பிடித்த ஷாஹீன் அஃப்ரிட

மீண்டும் முதலிடம் பிடித்த ஷாஹீன் அஃப்ரிட

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி ஒருநாள் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் மீண்டும் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டியில் 8.5 ஓவர்களில் 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகளில் அவர் 12.62 சராசரியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் அஃப்ரிடி 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்தார்.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் நடுப்பகுதியில் அஃப்ரிடி பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியளில் முதல் இடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles