Monday, July 28, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் இலங்கை போக்குவரத்து சபை விசேட சேவையை முன்னெடுப்பதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலுக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு புகையிரதத்தில் பயணிப்பவர்களுக்காக கூடுதலாக பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத துணைப் பொது மேலாளர் என்.ஜே. இதிபொல தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தேர்தல் சேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதால் நாளை வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles